கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

20.1.10

பிரிவினைக்கோடுகள்

இன்று
ஒரே தாயிடம் சூல் கொள்கிறார்கள்
பாண்டவரும்,கௌரவரும்.

பாஞ்சாலிகள் வரும் வரை
பாண்டவர்கள் தான்.
பாசத்தையும்,பிரியத்தையும் மட்டுமே
பகிர்ந்து கொண்டவர்கள்
பாஞ்சாலிகளின் வருகைக்குப்பின்
பங்கீட்டை மட்டும் விவாதிக்கிறார்கள்.

தூது வரும் கண்ணபிரான்கள்
ஒரு வீட்டு நெருப்பெடுத்து
ஒரு வீட்டில் பற்ற வைத்து- அவர்களின்
ஒற்றுமைக்கு உலைவைத்து.

முகப்பு, வளவிலிருந்து அடுப்படி வரை
பாகம் பிரித்து கோடு போட்டு
அண்ணனும் தம்பியும் பங்காளிகளாய்..
ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட
வேற்றுமை விதைகளின் விஷம்
வேர்வழி ஊடோடி விழுதுகளுக்கும்.

குருஷேத்திர சீற்றம்
பிடரி சிலிர்த்த சிங்கமென மனங்களில் புரண்டு
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்க.

கோடுகள் அழியும்
நாட்களுக்காய்
நம்பிக்கையற்றுக்காத்துக்கிடக்கும்
நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்...

5 கருத்துகள்:

 1. //கோடுகள் அழியும்
  நாட்களுக்காய்
  நம்பிக்கையற்றுக்காத்துக்கிடக்கும்
  நவீன குந்திகள் எங்கள் கிராமமெங்கும்... //

  நல்லாயிருக்குங்க....

  பதிலளிநீக்கு
 2. கவிதைகுள் மகாபாரதத்தை அழகாக சுருக்கி இருக்கிறீர்கள்
  மிகவும் அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தொடர் வேலைப்பளுவால் ஒரு மாதமாக வலை வருகை இல்லை. நீங்கள் ஆசிரியர் என்றதும் சோர்வை மீறி நான்கு நாட்களையும் இன்று ஒரே மூச்சில் பார்த்தேன். உண்மையிலேயே மூச்சடைந்து விக்கித்து நிற்கின்றேன்.

  என்னவொரு மொழி ஆளுமை. லாவகம். தனித்தமிழ் புலமை.

  ஐயோ ரொம்ப பெருமையா ஆச்(சி)சரியமா சந்தோஷமா இருக்குங்க.

  உடல் வலியுடன் உள்ளே நுழைந்தவனுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சி.

  தொடரட்டும் உங்கள் பணி.

  ஒரு நாள் முழுமையாக உங்கள் மொத்த தலைப்புகளையும் உள் வாங்க வேண்டும்.

  பகிர்ந்து கொள்கின்றேன்.

  பதிலளிநீக்கு