கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

18.1.10

பெண் பார்க்கும் படலம்

புன்னகையும்  பொன்னகையும்
கடன் வாங்க வேண்டியில்லாதிருந்ததால்
பொலிவாய்த்தான் இருந்தேன் நான்.

பெற்றோருக்கும்,உற்றோருக்கும்
மாப்பிள்ளைக்கு
என்னை பிடிக்க வேண்டுமே என்ற கவலை தான்
மாப்பிள்ளையை
எனக்குப்பிடிக்க வேண்டி
கவலை இல்லை யாருக்கும்

வந்தவர்கள் அளந்தார்கள்
உச்சி முதல் பாதம் வரை.
"கறுப்புதான் ஆனாலும் படிச்சிருக்கு"
"அஞ்சு பொண்ணாம் ஆனாலும் நல்லா செய்வாகளாம்"
குறைகளை நிறைகளோடு
சமரசம் செய்தார்கள்.

நாற்றங்காலில் நாற்றுப்பறிக்க வந்த விரல்கள்
நாற்றின்
உணர்வு  வேர்களை வலிக்கப்பறித்ததில்
வெறுப்பு தனியாய் வேர் கொண்டது.
நாற்று , நடவு வயலில் தன்னை நட்டுக்கொண்டு
வேர் பிடித்து,கதிர் விரித்து
செழித்த போது
விரல்கள் மீதான வெறுப்பு
தனியாய் விருட்சமாகி விட்டிருந்தது


இப்படித்தான்
சம்பிரதாயச்சடங்குகள்
உறவுகளின் அன்னியோன்யத்தை
அன்னியமாக்கி விடுகிறது.
இன்றும்.


இப்படித்தான்
கிராமங்களில்
மாமியாரும் நாத்தனாரும் பூச்சாண்டிகளாகின்றனர்
ஆண் மகனின் குழந்தைகளுக்கு.

6 கருத்துகள்:

  1. அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி! அப்பப்ப வந்துட்டுப்போங்க ஐயா!

    பதிலளிநீக்கு
  3. சமூகத்தின் மீதுள்ள கோபத்தை நன்றாக வெளிப்படுத்தி இருக்ரீர்கள் வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு