திருவிழா முடிந்து
வெறுமையாகிக் கிடக்கும்
கிராமத்து வீதிகள் கண்டு
கண்கலங்கியழுத அறியாமை
உயர உயரப் பறந்த பட்டம்
நூலறுந்து
மின்சாரக்கம்பிகளில் குலைந்த வருத்தம்
மண் குடத்தில்
ஊரணி தண்ணீர் எடுத்து வந்து
தலையோடு குடமுடைந்து
தண்ணீர் வழிந்து நனைந்து நின்றது
கண்மாயில்
நீச்சலறியாது
கரையிலமர்ந்து நீச்சலில் திளைப்பவர்களை
பொறாமையில் வெறித்தது.
புதுப்பாவாடை,தாவணி
பிடித்த மாதிரி அமைந்துவிட்டால்
புதுபுதுக்கனவுகளில் தூக்கம் தொலைத்தது
பூ,நகை,புடவை
புதிதாய் கிடைத்துவிட்டால்
உலகமே கிடைத்ததாய்
உருகிக்கிடந்தது.
புதுப்புது சமையல்
முயன்று பார்த்து
அப்பா,அம்மா,உறவுகள் தட்டிக்கொடுக்க
ஒற்றைப்புன்னகையில் கர்வம் கொண்டது
கல்லூரி முடித்து
கனவுகள் கலைத்து
சிந்திக்கக் கற்றது.
இப்படி மலரும் நினைவுகளை
மனதில் அசைபோட
பெரிய மனுஷி உறங்கிப்போனாள்.
உள்ளே உறங்கும் குழந்தை விழித்துக்கொண்டது
//புதுப்புது சமையல்
பதிலளிநீக்குமுயன்று பார்த்து
அப்பா,அம்மா,உறவுகள் தட்டிக்கொடுக்க
ஒற்றைப்புன்னகையில் கர்வம் கொண்டது//
excellent SHANTHI
புதுப்பாவாடை,தாவணி
பதிலளிநீக்குபிடித்த மாதிரி அமைந்துவிட்டால்
புதுபுதுக்கனவுகளில் தூக்கம் தொலைத்தது
.............same feelingsyaa!
நல்லதொரு கவிதை.
பதிலளிநீக்குஉள்ளுணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்த்துகள்.