கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.1.12

தாயன்பு


சாரல், தூறலாகி
தூறல், பெரு மழையாகி
மழையின் பிரவாகம்
சிற்றாறாய்ப் பயணிக்கிறது.

பயணிக்கும் பாதையெங்கும்
கழிவுகளைக் கழுவி
சுழித்து ஓடுகிறது.
கப்பல் விட்டும்
கால்களை நனைத்து விளையாடியும்
குதூகலிக்கிறது குழந்தை மனது

வெயிலின் தாக்கம் குறைத்து
பூமியின் வன்மம் உடைத்து  
முளைக்கவும், பூக்கவும், குடை பிடிக்கவும்
வீழும் நீர்த்தாரையில் கைகள் விரித்து
தட்டாமாலை சுற்றி சிலிர்க்கவும், பெய்கிறது மழை
காற்றில் பரவுகிறது ஈரம்
கன்னங்களில் ஊடுருவுகிறது குளிர்

சோரப்பெய்த மழையில்
குளிர நனைந்த பூமி
இதழ் விரித்துக் காத்திருக்கிறது
இலைகள் சொட்டும் அன்பின் துளிகளுக்காய்….
அவை சொட்டும் சிறு துளியில் நனைவதான
இலைகளின் பெருமிதத்தை எண்ணி
தாய்மையின் பூரிப்பில் குளிர்கிறது பூமி!

3 கருத்துகள்:

  1. //அவை சொட்டும் சிறு துளியில் நனைவதான
    இலைகளின் பெருமிதத்தை//

    மிக அருமை. தாய்மையின் பூரிப்பை அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு