கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.9.11

கடிதங்கள்இப்போதெல்லாம்
 யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை

தேரோட்டமா? திருவிழாவா?
நாற்றுப்பறிப்பா? நடவா?
களையெடுத்தலா? கதிர் அறுப்பா?
செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.

நலம் நலமறிய எழுதவும்
உப்புக்கண்டம் போடவும்
ஓடுடைத்து புளி வாங்கவும்
தூதாகப் போகும் இன்லண்ட் கடிதம்

படித்த கடிதங்களை,
பொத்திப் பாதுகாத்து
காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
கிழித்தெறிய களைந்த போது
ஒவ்வொரு வார்த்தையிலும்
உறைந்து கிடந்தது கடந்த காலம்

3 கருத்துகள்:

 1. இமெயில் காலத்துல யாருங்க கடிதம் போடறாங்க..

  கவிதை அந்த ஆதங்கத்தை பிரதிபலிக்குது.. நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான்...
  கடிதம் எவ்வளவு செய்திகளைத் தாங்கி வந்தது. எல்லாம் இன்று குறுஞ்செய்தி, மின்னஞ்சல் என ஆகிவிட்டது. கடிதம் என்பது மறந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. //படித்த கடிதங்களை,
  பொத்திப் பாதுகாத்து
  காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
  கிழித்தெறிய களைந்த போது
  ஒவ்வொரு வார்த்தையிலும்
  உறைந்து கிடந்தது கடந்த காலம்//

  உண்மைதான். மிக நன்று சாந்தி.

  //
  இப்போதெல்லாம்
  யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை//

  யாருமே யாருக்குமே:(!

  பதிலளிநீக்கு