கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

21.9.10

15. அதிரசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலம், சுக்குப்பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

முதலில் பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ளவும். சலிக்கும் போது பாதி அரிசிக்கு சிறுகண் சல்லடையும், பாதி அரிசிக்கு பெருங்கண் சல்லடையும் உபயோகித்து சலித்தெடுக்கவும். வெல்லத்தை பொடித்து, 150 மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அதாவது தண்ணீரில் போட்டு, சிறிது நேரத்தில் உருட்ட வரவேண்டும். அந்தப்பதத்தில், மாவை சிறிது, சிறிதாகப் போட்டு, கட்டியின்றிக் கிளறி விடவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து, கையில் ஒட்டாத பதம் வந்ததும், அல்லது மாவை எடுத்து கை முறுக்கிற்கு சுற்றுவது போல் சுற்றினால் அறுந்து விடாமல் வர வேண்டும். அந்தப் பதத்தில் இறக்கி வைத்து. ஏலம் சுக்குப்பொடி கலந்து, பருத்தித் துணியால் வேடு கட்டி, மூடி வைக்கவும். மறுநாள், அல்லது இரண்டு நாட்களில் இந்த மாவில் அதிரசம் செய்யலாம். சிறு உருண்டை மாவை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த அதிரசம் கைகளால் பிய்க்கும் போதே உதிரும். சீர்ப்பலகாரங்களில் ஒன்று.

2 கருத்துகள்:

  1. அதிரசம்... பார்சல் அனுப்பினால் நல்லாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை, ஊருக்கு வரும் போதும் விரும்பி சாப்பிடும் ஐட்டத்தில் ஒன்று. :-)

    பதிலளிநீக்கு