கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

9.7.10

கூடுகள் தேடி....

சாளரவெளியினில் தெரியும்
மரக்கிளையில் கூடு கட்டி
சிறகு சிலுப்பி
தலை கவிழ்த்துப் பார்க்கும்
தேன் சிட்டு ஜோடியொன்று.

அதிகாலை எழுப்பும் அலாரம் எனக்கு
அதன் கீசென்னும் குரல்
கதிர்கள் சீறும் காலையில்
திசைகள் கிழித்து
சின்னச்சிறகால் வானளந்து
உண்டி தேடி கூடு திரும்பி
சுபமானது அதன் வாழ்க்கை

மழைக்கும், வெயிலுக்கும்
காற்றுக்கும், புயலுக்கும் தாங்குமா கூடு?
கேள்விகளோடு தூக்கம் தொலைத்தாலும்
விடியலில்
விசனங்களற்ற அதன் குரல்.
எதற்கும் பொருந்திப்போகப் பாடம் சொல்லும்.

நகர்ந்தன நாட்கள்...
தந்திரங்களற்ற தேன்சிட்டுகள்
எங்கோ வேற்றிடம் தேடி.
புதிய மரம், புதிய கூடு
ஒரு நாளும் திரும்பவில்லை
பழைய கூட்டின் உரிமை தேடி
பழைய மரக்கிளைக்கு.

கட்டுகள் எதுவுமின்றி
சுதந்திர வெளியில்
திசைகளற்ற வானில் சிறகசைக்கும்
எங்கோ வனத்தில்
ஏதோ மரத்தில் அதெற்கென ஒரு கூடு.

கூடுகளும், உடைமைகளுமே
தேடலாகிப்போன எமக்கோ
விலக்க முடியா விலங்குகளுடன்
தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்

5 கருத்துகள்:

 1. //கூடுகளும், உடைமைகளுமே
  தேடலாகிப்போன எமக்கோ
  விலக்க முடியா விலங்குகளுடன்
  தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்//

  :(

  http://vaarththai.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. //ஒரு நாளும் திரும்பவில்லை
  பழைய கூட்டின் உரிமை தேடி
  பழைய மரக்கிளைக்கு.//

  அருமை.

  //கூடுகளும், உடைமைகளுமே
  தேடலாகிப்போன எமக்கோ
  விலக்க முடியா விலங்குகளுடன்
  தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்//

  அற்புதம்.

  பதிலளிநீக்கு
 3. //கூடுகளும், உடைமைகளுமே
  தேடலாகிப்போன எமக்கோ
  விலக்க முடியா விலங்குகளுடன்
  தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்//

  அருமை.......

  பதிலளிநீக்கு