கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

31.8.12

தாலாட்டுப்பாடல்
ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ
மதலை சிறு குழந்தை என் கண்ணே!
உன் மாமன்மார் வீடு எங்கே!
அந்தோ தெரியுது பார் நல்ல கண்ணே!
ஆயிரம் கால் கல் தூணு

வெள்ளி விளக்கெரியும் கண்ணே – உன்
வெண் கொலுசு ஓசையிடும்
தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல

தங்கத்தால் கால் நிறுத்தி கண்ணே!
நீ தாமரையால் பந்தலிடு
வெள்ளியில் கால் நிறுத்தி கண்ணே
நீ வெற்றிலையால் பந்தலிடு
உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்

குளிக்கக் கிணறு கட்டி, என் கண்ணே!
நீ கும்பிடவோ சிலையெழுதி
படிக்க மடமோ கட்டி வச்சார்! என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்.

மஞ்ச மணக்குது பார் என் கண்ணே!
உன் மாமன் வயலோரம்
இஞ்சி வச்சா பிஞ்சிறங்கும் என் கண்ணே!
உன் இளைய மாமன் போற வழி.

ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ

1 கருத்து:

  1. சாந்தி...நலமா?
    நீண்ட வருடங்களுக்குப்பின் இங்கு வந்தேன்!
    அதன் பலன்..!நல்லதொரு தாலாட்டு கிடைத்தது!
    (சட்டுன்னு சுட்டுட்டேன் :)நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு