கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

20.2.10

உப்புக்கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி அல்லது குருணை - 2 உழக்கு
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - சிறிது
தாளிக்க - எண்ணெய்,கடுகு,உளுந்து,வர மிளகாய் -4

அரிசி அல்லது குருணையை ஊற வைத்து ரவையை விட சற்று பெரிதாக அரைத்து எடுத்து,அதோடு பாசிப்பருப்பை ஊறவைத்துக்கலந்து,தேவையான உப்பும் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.தேங்காயைத்துருவி வைத்துக்கொண்டு,சின்ன வெங்காயத்தை உரித்து,சன்னமாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து,காய்ந்ததும் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து,மிளகாயைக்கிள்ளிப் போடவும்.கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப்போட்டு,வாசம் வரும் வரை வதக்கி,பின் தேங்காய்த்துருவல் போட்டு வதக்கி,மாவையும் சேர்த்து,பின் கொழுக்கட்டைகளாய் பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.தேவைப்பட்டால்,சிறிது சீனி சேர்க்கலாம்.பிறகு,இட்லிச்சட்டியின் குழித்தட்டில் எண்ணெய் தடவி,கிளறிய மாவை விருப்பமான வடிவில் பிடித்து வேக வைக்கவும்.இந்தக்கொழுக்கட்டை சூடாக,தக்காளிச்சட்டினியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. அடுப்பு பத்தவைக்கிறது பத்தியும் சொல்லுங்க..:)

    பதிலளிநீக்கு
  2. சங்கர் said..

    // அடுப்பு பத்தவைக்கிறது பத்தியும் சொல்லுங்க..:)//

    அட! ஆமால்ல...

    பதிலளிநீக்கு
  3. சாந்தி அதி முக்கியமான அத்தனை பலகாரத்தையும் சொல்லியாச்சு!உப்புச்சீடை அதிரசம் விட்டுப்போச்சு :)

    ஆடிக்கூழுக்கு(கும்மாயம்)உழக்கு மாவுக்கு தண்ணி,நெய் எவ்வளவு?அது இன்னும் எனக்கு சரியா வரலை!நீங்க சொல்ற அளவிலேயாவது ஒழுங்கா வருதா பார்க்கலாம் :))

    பதிலளிநீக்கு
  4. ஏங்க அப்படியே ஒரு பார்சல் அனுப்பிடுங்க.....

    பதிலளிநீக்கு