சொப்புவைத்து விளையாடும்
சின்னஞ்சிறு வயதிலும்
இடுப்பில் பாப்பாவோடு
வீதிக்குழந்தைகளின்
விளையாடல்களின் பார்வையாளராய் நான்
கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தில்
மண் பாத்தியில்
ஒளிக்கப்படும் ஈர்க்குச்சி தேடி எடுப்பதற்குள்
அடுப்படி உதவிக்கு
ஆயிரம் முறை அழைக்கும் அம்மா!
நொண்டி,காசிக்குப்போறேன் - நானும் வாரேன்
ஐஸ் பாய்,பூப்பறிக்க வருகிறோம்,
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
இப்படி
எத்தனை விளையாட்டு என் பால்யத்தில்.
எதுவும் வாய்க்கவில்லை எனக்கு முழுதாய்.
தவணை முறையில் விளையாடும் என்னால்
தப்பிப் போகிறது அவர்களின் விளையாட்டு என்று
பார்வையாளனாய் மட்டும் அங்கீகரித்த பால்ய சினேகிதர்கள்.
மூத்தபிள்ளையாய்ப்பிறந்து
இளையோரைச்சுமந்து என்
இடுப்பே வளைந்ததாய்
என் தாயைப்புறம் பேசும் சொந்தங்கள்.
எதுவும் புரியாத வயதில்
என் தாயின் கண்ணீரும் புரியாது போனது.
புரிந்த போது
காலம் என்னை வேறிடத்தில் நட்டுப்போக,
உடன்பிறப்பை சுமப்பதற்கும்
உதவியாய் இருப்பதற்கும்
இன்னொரு பால்யம் வேண்டும் மனது
இன்று
எனக்காய் என் உடன்பிறப்புகள்
என் பாரங்களைப்பகிர்ந்து கொள்கையில்
வெட்கமாய் இருக்கிறது.
நான் அடித்தது வலிக்கிறதா?
அன்பு நிறை உடன்பிறப்புகளே!
கவிதை நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குஏங்க நீங்க சின்ன வயசுல விளையாடினது கிடையாதா?
நல்லா இருக்குங்க..
பதிலளிநீக்குஹெட்டிங் ஃபோட்டோ சூப்பரேய் ரசனையா இருக்கு...
பதிலளிநீக்குகவிதை ஃபீலிங்ஸ்...
anbu niraintha udan pirabbe . nanru. super.
பதிலளிநீக்கு///நான் அடித்தது வலிக்கிறதா?
பதிலளிநீக்குஅன்பு நிறை உடன்பிறப்புகளே///
லைட்டா...
கவிதை மிக நன்றாக இருக்கிறது...
ஒரு பெண்ணின் வலி கவிதையின் ஊடே தெளிவாய் தெரிகிறது...
//கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தில்
பதிலளிநீக்குமண் பாத்தியில்//
எப்படி இருந்திருக்குமென்று என்னால் அனுமானிக்க முடிகிறது :))... பெரிதாக எழுதி சொல்ல வேண்டியதை அழுத்தி இப்படி கொடுத்திட்டீங்க, நன்றாகவே வந்திருக்கிறது.
மனதை நெகிழவைத்து கண்ணீரை வரவழைத்து அனைத்தையும் சொல்லிய ஆழமான கவிதை இது!
பதிலளிநீக்கு