பறவைகள் கூடு திரும்பும்
பொன் மாலைப் பொழுதொன்றில்
தேவதை ஆகும் வரம் கிடைத்தது.
தென்றலில் ஆடும் விரிந்த ஆடை
சிறகுகள் முளைத்தது
தலையைச்சுற்றி ஓளிவட்டம்
மின்னும் கற்களில் சின்ன கிரீடம்
கண்கள் மின்ன
நினைத்துக் குதூகலித்து
உயரப் பறக்கிறேன்.
நிலா, அழைக்கிறது.
நட்சத்திரங்கள் புறம் பேசுகிறது
மழை பொழியத்தொடங்கியது.
வானவில் குடை பிடித்து
வண்ணங்களை குழைத்து
மழைச்சரத்தின் ஊடாய்
பூக்களை அனுப்பியது என் பூமியெங்கும்
புதிதாய் முடிசூடிய அரசியாய்
நகர்வலம் வர
என் ராஜபாட்டை எங்கும் ஒலிக்கும் வாழ்த்தொலிகள்.
காற்றில் கைகளை அசைத்து
எனக்கான உலகை நானே சிருஷ்டித்து
ஆவலும் ஏவலுமாய் நான்
தேவைகள் அற்றுப்போனது.
ஒளிவட்டம் கண்டு மிரண்டனர் மனிதர்கள்
எனது அந்தப்புரத்தோட்டத்தில்
பூக்களுடன், பட்டாம்பூச்சிகளுடன் உறவாடி...
பிரியங்கள் கிடைக்காத வெற்றுவரத்தின் மீதான
வெறுப்பு வளர்ந்த நொடியில்
தூரத்தில் விளையாடும் குழந்தைகளை நோக்கி ஓட..
வழியெங்கும் சிதறின
சிறகில் இருந்த இறகுகளும், கிரீடத்தில் மின்னிய கற்களும்.
அக்கா கவிதை அருமையா இருக்கு.
பதிலளிநீக்குசிறகு முளைத்த தேவதையாய் படிக்க மனசு விரும்பியது.
இப்ப நம்ம வீட்டுப்பக்கமே வாரதில்லையே... வாங்க வந்து கருத்துச் சொல்லுங்க.
http://vayalaan.blogspot.com
இண்ட்லியில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு.... உங்கள் அனுமதியில்லாமல்.
பதிலளிநீக்குஆஹா... நல்லா இருக்குதுங்க...
பதிலளிநீக்கு