கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

16.1.11

வறண்ட நிலத்தின் விளிம்பில்...

வாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்
விரிந்து கிடக்கிறது....

நேயம் வறண்டு போன வானிலிருந்து
எப்போதாவது விழும் அன்பின் துளி

துளிர்த்து இலை விட்டு
கிளைத்து வளர்கிறது சுயம்

விதைப்பது நெல்லா? நெருஞ்சியா?
அறியாது விதைத்து விட்டு
விளைந்ததும் அற்றுப்போனது பிடிப்பு

பூக்கும் நம்பிக்கையற்று
வளர்கிறது விரக்தி

ஆருடங்களில் லயித்து
பேராசையில் சிக்கி தோற்று
வளர்கிறது வன்மம்

சூதும் வாதும் ததும்பி வழிய
காலம் குறித்த வேட்கையில்
உறிஞ்சிக் குடிக்கிறது வறண்ட நிலம்

ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....

4 கருத்துகள்:

  1. //ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
    கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
    திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....//
    அருமையான வரிகள். ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.
    அக்கா நலமா? நீண்ட நாளுக்குப் பிறகு உங்கள் பதிவு. சந்தோஷமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
    கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
    திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....

    .....மனதை கனக்க வைக்கும் கவிதைங்க....

    பதிலளிநீக்கு