கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

15.7.10

ஆசைகள்

காயசண்டிகையின்
தீராப்பசி
ஒவ்வொரு மனதிலும்
தீராத ஆசைகளாய்....
அட்சய பாத்திரத்தில் சுரக்கிறது,
அன்னத்திற்கு பதிலாக செல்வங்கள்.
 மணிமேகலைகளோ
அட்சய பாத்திரத்தில் சுரக்கும்
செல்வங்களை அள்ளி
இன்று, நாளை,வருங்காலம்,
தலைமுறைகள் தாண்டி தாமே சேமிக்க
நசுங்கி,நலியும்
அட்சயபாத்திரங்கள்.

ஆசை ஒழி என்ற புத்தனின் சிலைகளைக் காட்சிப்பொருளாக்கி
வழிபாட்டறையில் குபேரர்கள்.
போதிமரங்கள் எல்லாம்
விறகுக்குப்போன ஒரு பொழுதில்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.
கீதையின் வாசகங்கள் உதட்டுச்சாயமாய்
குரானும், விவிலியமும் சரிகை ஆடைகளாய்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.


போதுமென்ற மனதுகள் பரிகசிக்கப்பட,
பசிய மனதுகள் காழ்ப்பை உமிழ,
காழ்ப்பு நெருப்பாகி, பூமி சிதிலமாகி,
கந்தர்வர்களும் அரக்கர்களாய்...
யுகத்துக்கொரு அவதாரம் என்றது போய்
நூறு அவதாரங்கள் ஒரு யுகத்தில்
சம்ஹாரங்கள் முடிந்தபாடில்லை.
கனவுகளுடன் உறங்கியது போய்
கவலைகளுடன் உறங்க வைக்கும் 
ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........

7 கருத்துகள்:

  1. \\கவலைகளுடன் உறங்க வைக்கும்
    ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........\\விட்டொழிக்க முடியாததால் தான் கவலையே.

    பதிலளிநீக்கு
  2. //...கனவுகளுடன் உறங்கியது போய்
    கவலைகளுடன் உறங்க வைக்கும்
    ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்...//

    நல்ல வரிகள். நல்ல கவிதையை படித்த திருப்தி.
    என்னங்க இந்தியா பொயிட்டு வந்த பின்னால நம்ம வலைப்பூ பக்கம் வரவேயில்லை... வேலைப்பளூ அதிகமோ?

    பதிலளிநீக்கு
  3. எப்போ படிக்க வந்தாலும், படிச்சிட்டு சும்மாவே போய் விட முடிவதில்லை... அவ்வளவு அழுத்தமா இருக்குங்க. இந்தக் கவிதையும் அருமை.

    .....போதுமென்ற மனதுகள் பரிகசிக்கப்பட,
    பசிய மனதுகள் காழ்ப்பை உமிழ,
    காழ்ப்பு நெருப்பாகி, பூமி சிதிலமாகி,
    கந்தர்வர்களும் அரக்கர்களாய்.....

    வரிக்கு வரி பஞ்ச்!!

    பதிலளிநீக்கு
  4. //ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........
    //
    classic

    பதிலளிநீக்கு
  5. //ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........//

    அருமை அருமை. ஏதோ ஒரு ஆசை எப்படியும் நம்மை ஒட்டியபடியேதானோ...?

    பதிலளிநீக்கு
  6. //கனவுகளுடன் உறங்கியது போய்
    கவலைகளுடன் உறங்க வைக்கும்
    ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........//

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஆசை ஒழி என்ற புத்தனின் சிலைகளைக் காட்சிப்பொருளாக்கி
    வழிபாட்டறையில் குபேரர்கள்.
    போதிமரங்கள் எல்லாம்
    விறகுக்குப்போன ஒரு பொழுதில்
    ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.
    கீதையின் வாசகங்கள் உதட்டுச்சாயமாய்
    குரானும், விவிலியமும் சரிகை ஆடைகளாய்
    ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.


    ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு